Search My blog details....

Saturday, September 14, 2013

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல்





நான் சித்தார்த்.. சென்னையில் எனது அப்பாவின் ஆடிட்டர் தொழிலில் அவருக்கு பார்ட்னராக இருக்கிறேன்.. வயது 44.. காதோரம் நரை ஆரம்பமாகிவிட்டது.. இப்போது என் மகளும் சி.ஏ படித்துக் கொண்டிருக்கிறாள். என் மனைவி மதுமிதா .. வயது 47 ஆம் என்னைவிட 3 வயது மூத்தவள்... எங்கள் திருமனம் காதல் திருமனம்.எனது கல்லூரிக் காதலை உங்களோடுப் பகிர்ந்துக் கொள்ள இருக்கிறேன்..


நான் பி.காம் படித்தது கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரில் 1980 -83 பேட்ச். அப்போது எங்கள் காலேஜில் பி.காமில் வெறும் மாணவர்கள் மட்டும்தான்.. மீதி எல்லாப் பிரிவுகளிலும் ஆண், பெண் இரு பாலாரும் படித்தார்கள்.


எங்கள் காலேஜ் மற்றக் கல்லூரிகளைப் போல இல்லாது ஒரு பூங்காவனம் போல இருக்கும்... தினமும் எங்கோ ஒரு பார்க்கிற்கு நன்பர்களுடன் சென்று மகிழந்து வந்ததுப் போலத் தான் இருந்தது.. இந்த அனுபவத்தை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரில் படித்தவர்கள் மட்டுமே உனர முடியும்..


எங்கள் கல்லூரி காலை 8.15க்கு ஆரம்பித்து 12.45 க்கு முடியும். அவ்வளவுதான்.. தினம் மதிய சாப்பாடு முடிந்ததும் ஊர் சுற்றக் கிளம்பிவிடுவோம்..இரவு 10 மணிக்குதான் பெரும்பாலும் ஹாஸ்டல் திரும்புவோம்.


காலையில் சூரியன் உதிக்க மறந்தாலும் 7.45 மணிக்கு எங்கள் காலேஜ் வாசல் வந்துவிடுவோம். கேட்டிலிருந்து சுமார் 100 மீட்டருக்கு ஒரு நேர் ரோடு செல்லும் அதன் முடிவில் கல்லூரியின் மெயின் கட்டிடம் இருக்கும். அந்த ரோட்டின் இரு பக்கமும் 3 அடி உயரத்தில் சுவர் (பேரப்பட்) இருக்கும். அதுதான் எங்கள் மார்னிங் ஸ்பாட். கல்லூரிக்குள் வரும் அத்தனை டே - ஸ்காலர் பெண்களையும் அட்டென்டன்ஸ் எடுத்து விட்டு பிறகுதான் எங்கள் வகுப்பிற்கு செல்வோம். பெரும்பாலும் எங்கள் ப்ர·பஸர்கள் வகுப்பில் கவனிக்க விரும்பாதவர்கள் வருகைப் பதிவு செய்துவிட்டு வெளியே சென்றுவிடலாம் என்பார்கள்.. அவர்கள் சொல்பேச்சு மீறாத நாங்களும் வெளியேறி கேன்டீன் சென்று விடுவோம்.


கேன்டீனில் டீ, எக் போன்டா வாங்கிக் கொண்டு அரட்டை அடித்துக் கொண்டே 1/2 மணிநேரம் ஓடும். அதன் பின் பக்கத்தில் இருக்கும் ஆடிட்டோரியம் படிக்கட்டுக்கள் தான் எங்கள் இடம். நல்ல வேப்ப மரக் காற்று.. அரட்டை சிகரெட் என்று 3 மணிநேரம் ஓடும். 12 மணிக்குமேல் ஹாஸ்டலுக்குப் போய் சாப்பாடு.. அப்புறம் டவுனுக்கு ஊர் சுற்ற.. இதுதான் எங்கள் எல்லோருக்கும் அன்றாட வாழ்க்கை..


2ஆம் ஆண்டு முடிந்து 3ஆம் ஆண்டு ஆரம்பமானது. அன்று 1982 ஜூன் 8ஆம் தேதி புதன் கிழமை அன்றுதான் கல்லூரிக்கு முதல் நாள்.. காலை 7.30க்கெல்லாம் கேட்டில் ஆஜரானோம். அன்று புது ·பிகர்ஸ் நிறைய வரும் ஒன்னையும் மிஸ் பன்னாம பாக்கனும் என்றுதான்.


எல்லா பெண்களையும் பார்த்து விட்டு, அட்டென்டன்ஸ் கொடுக்க முதல் பீரியட் வகுப்பிற்குச் சென்றோம். எங்கள் பி.காம் துறை மெயின் பில்டிங்கில் உள்ளது. எடுத்ததும் முதல்வர் அறை. அதன் எதிரே அலுவலகம் சற்று உள்ளெ சென்றால் படிக்கட்டு அதில் முதல் மாடியில் முதல் 2 வருட வகுப்புக்களும் 2 ஆவது மாடியில் 3ஆம் வருடம் மற்றும் எம். காம் வகுப்புக்களும். அன்று நாங்கள் எங்கள் வகுப்பிற்கு செல்ல முதல்வர் அறை வழியாக உள்ளே நுழைந்தப் போது அங்கு உள்ள நாற்காலியில் பிரின்ஸிபலைப் பார்க்க ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.


வெளிர் மஞ்சள் நிற சேலை அதே நிறத்தில் ப்ளவ்ஸ். 1 இன்ச் அளவுற்கு சேலையில் கரும் பச்சை நிற பார்டர். 5.5 அடி உயரம் மெல்லியத் தேகம். சுருண்ட அழகானக் கூந்தல். அமைதியான முகம்.. மிக அடக்கமானத் தோற்றம் மொத்தத்தில் ஜானி பட ஸ்ரீதேவி 4,5 வயது குறைந்துக் காணப்பட்டால் எப்படி இருக்கும் அதுப் போல இருந்தாள். "யாரோ நியூ அட்மிசன் பிரின்சிய பாக்கனும் போல மச்சி டக்கரா இருக்கால்ல" என ஒரு நன்பன் கமென்ட் அடித்தான். நான் "மாப்பிள்ளை எனக்கும் சேத்து அட்டென்ட்டன்ஸ் கொடுத்துவிடு நான் கொஞ்ச நேரம் இவளைக் கவனிச்சுட்டு வரேன்" என்று சொல்லி விட்டு நானும் ப்ரின்ஸிபலை பார்க்க காத்திருப்பதுப் போல அவள் அமர்ந்திருந்த நாற்காலிக்கு பக்கத்தில் ஒரு சீட் விட்டு அமர்ந்தேன். பின் அங்கிருந்து அவள் முகம் சரியாகத் தெரியாததால் எழுந்து எதிர் வரிசையில் அவளுக்கு நேராக உட்கார்ந்தேன்.


அவள் கண்களையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்களுக்குள் இடையே 8 அடி தூரம் தான் நடுவில் ஒரு சென்டர் டேபில்.. அதில் சில மேகஸின்களும் நியூஸ் பேப்பர்களும் இருந்தன. யாராவது நம்மை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால் நாம் என்னதான் வேலையில் இருந்தாலும் உள் மனதில் ஏதோ ஒருவித உணர்வு உண்டாகுமில்லையா.. அதுப் போல அவளுக்குத் தொண்றியிருக்கும் போல.. நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தாள். நான் "என்ன நியூ அட்மிக்ஷனா?" என்றேன். ஒன்னும் பதில் சொல்லாமல் ஒரு மேகஸினைக் கையில் எடுத்துக் கொண்டு அதில் கவணத்தைச் செலுத்தினாள். ஹலோ உன்னத்தாம்மா கேட்கிறேன்.. நியூ அட்மிக்ஷனா.. ·பர்ஸ்ட் டேயே திமிரா பதில் சொல்லாமல் உட்கார்ந்திருக்க..க்ளாஸ்க்குப் போகாமல் ப்ரின்ஸிபல் ரூம் முன்னால் என்ன வேலை?" என்றேன்.


அவள் மீண்டும் என்னைப் பார்த்தாள்.. என் எண்ணம் என்ன என்பது கண்களிலேயேத் தெரிந்திருக்கனும்.. ஒன்றும் பதில் சொல்லாமல் படிக்க ஆரம்பித்தாள்.. நான் எழுந்து "வெளிய வா கவணிச்சுக்கிறேன்.. எந்த டிபார்ட்மென்ட் ?" என்றேன். அவள் என் கண்களை உற்றுப் பார்த்து "நியூட்ரிக்ஷன் அன்ட் டயட்டிக்ஸ்" என்றாள். "அதான் திமிரா இருக்க.. இங்கே வேண்டாம் ப்ரேக்கில கேன்டீன் வருவல்ல.. மாட்டினடி நீ இன்னைக்கு" என்று சொல்லி விட்டு நான் வெளியே சென்றுவிட்டேன்.


எங்கள் கேண்டீன் 5 பிரிவுகளாக இருக்கும்.ஒன்று ஸ்மோக்கர்ஸ் டென், இன்னொரு ஹால் காமன், 3 வது ஹால் லெக்சரர்ஸ்க்கு 4 வது லேடீஸ் தனியா சாப்பிட விரும்பினால் யூஸ் பன்னிக்கலாம். இன்னொரு பிரிவில் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து வருபவர்கள் சாப்பிட பயன்படுத்திக்கொள்ளலாம். எங்கள் செட் லெக்சரர் ஹால் தவிர எங்களுக்குத் தோனும் மற்ற எந்த ஹாலிலும் இருப்போம்.


10.30க்கு காலேஜ் டீ ப்ரேக்..நாங்கள் எப்போதுமே டீ ப்ரேக் பொழுதில் கேன்டீனில் இருக்க மாட்டோம். அப்போது ஆடிட்டோரியம் படிக்கட்டில் உட்கார்ந்திருப்போம். 11 மணிக்கு கும்பல் முடிந்ததும்தான் நாங்கள் கேன்டீன் போவோம். அன்றும் அப்படி உட்கார்ந்திருக்கும் போது காலையில் பிரின்ஸிபல் ரூம் முன்னால் பார்த்த அந்த மஞ்சள் சேலை பெண் கேன்டீன் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தாள். நான் அடிச்சுக்கிட்டிருந்த தம்மை வேகமா ஒரு இழு இழுத்துட்டு மீதியை ஒரு ·பிரன்ட் கையில் கொடுத்துவிட்டு கட கட வென கேன்டீன் நோக்கிச் சென்றேன். உள்ளே அவள் லெக்சரர்ஸ் உட்காரும் பிரிவில் அமர்ந்து கா·பிக் குடித்துக் கொண்டிருந்தாள்.


அவள் அருகேப் போய் ஒரு சேரில் உட்கார்ந்தேன்.. " ஹலோ உன் பேர் என்ன? இது லெக்சரர்ஸ் சாப்பிடற இடம். போய் அங்க காமன் ஹால் அல்லது லேடீஸ் ஹாலில் உட்காரு" என்றேன். அதற்குள் அவள் டீ சாப்பிட்டு முடித்திருந்ததால் எழுந்துவிட்டாள்.. என்னைப் பார்த்து.."சாரி சார் நாளையிலிருந்து அங்க உட்கார்ந்துக்கிறேன்" என்று சொல்லி வெளியே செல்ல ஆரம்பித்தாள். நான், "ஏய்.. பேசிக்கிட்டு இருக்கேன்ல என்ன அவசரம்.. நீ பாட்டுக்கு வெளியேப் போனால் என்ன அர்த்தம்?" என்றேன். அவள் அதற்கு சாரி சார் "க்ளாஸிற்கு லேட் ஆகிடுச்சு அதான்" என்றாள்..


"நாங்க எல்லாம் லேட்டானாலும் கவலைப் படுறோமா பார்.. அது என்ன நீ மட்டும் ஸ்பெசல்.. " என்றேன்.. அதற்கு அவள்.. நீங்கல்லாம் ஸ்டூடன்ட்ஸ் லேட்டாப் போகலாம் பட் நான் லெக்சரர்.. நானே லேட்டாப் போனால் தப்பில்லையா அதான்" என்று சொல்லிவிட்டு சர சர வென வகுப்பு நோக்கி சென்றாள். நான் அதிர்ந்து நின்றேன். இவ்வளவு அழகா ஒரு லெக்சரரா?..என..


என் நன்பர்களிடம் இதை சொன்னப்ப எல்லொரும் என்ன மச்சி ·பர்ஸ்ட் நாளே ஒருத்தி ஆப்பு வச்சுட்டாளா எனக் கிண்டலடித்தார்கள். நான் உடனே அவர்களிடம் சவால் விட்டேன்.. ஏய் இவளை மடக்கிக் காட்டுறேன்டா.. சேலஞ்ச்டா என்றேன்.. இதெல்லாம் அந்த வயதின் திமிர்.. எதையும் யோசிக்கிறதில்லை.. எதுக்கும் பயப்படுவதில்லை..வருவது வரட்டும் என்ற வரட்டுத் தைரியம்..


அன்று ஆரம்பித்ததுதான்.. தினம் காலை கேட்டில் நிற்போம்.. மதுமிதா அதான் அந்த "நியூட்ரிக்ஷன் அன்ட் டயட்டிக்ஸ்" டிபார்ட்மென்ட் புது லெக்சரர் வர வரைதான் நான் அங்கு இருப்பேன். அவள் வந்த்ததும் அவள் கூடவே ஆபீஸ் ரூம் வரை வந்து அவள் அட்டென்டன்ஸ் சைன் பன்னிவிட்டு அவளது டிபார்ட்மென்ட் செல்லும் போது கூடவே சென்று விட்டு விட்டு பின்தான் கேன்டீன் செல்வேன். சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் அவளிடம் ஏதாவதுப் பேசுவேன். என் எண்ணத்தைப் புரிந்துக் கொண்ட அவள் என்னைப் பார்த்ததும் விலகி விடுவாள். காலேஜ் முடிந்ததும் 1.00 மணிக்கு 2ஆம் நம்பர் பஸ்ஸில்தான் அவள் செல்வாள்.. அவளை பஸ் ஏத்தி விட்டுத்தான் ஹாஸ்டல் வருவேன். இப்படியாக என் மதுமிதா முயற்சித் தொடர்ந்தது.


அன்று எங்கள் காலெஜில் புதிய ஸ்டூடன்ஸ்க்கு வெல்கம் கொடுக்கும் விழா. கோவையின் அப்போதைய முன்னனி இசைக்குழு " சேரன் ஆர்கெஸ்ட்ரா" வினரின் கச்சேரி.. ஆடிட்டோரியத்தில் எல்லோரும் இருந்தோம். மதுமிதா 5 ஆவது வரிசையில் அமர்ந்திருந்தாள். சிலப் புதுப் பாடல்களுக்குப் பின் "ரோஜா மலரே ராஜக்குமாரி" பாடல் பாடப்பட்ட்து. அதைப் பாடிய ஆண் குரல் எங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவன். நான் மதுமிதாவையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் பாடலை தன் கண்களை மூடி ரசித்துக் கொண்டிருந்தாள். பாடல் முடிந்ததும் நான் மேடையேறி மைக்கில் பாடலைப் பாடிய சேகரைப் பாராட்டிவிட்டு "நாம் எல்லோரும் இந்தப் பாட்டை ரசிச்சோம் ஆனால் நம்மில் ஒருவர் மட்டும் தவறிப் போய் தூங்கி விட்டார்..அது வேறு யாரும் இல்லை நம்ம லெக்சரர் மதுமிதா மேடம்தான் அவருக்காக மீண்டும் இதேப் பாடலை பாடவேண்டும்" என்றேன். மொத்த கல்லூரி மானவர்களும் கைத்தட்டினார்கள். பின் நான் "மன்னிக்கனும் மதுமிதா மேடம் தூங்கவில்லை கண்மூடி அழகாக ரசித்தார்கள் அதற்காக ஒன்ஸ்மோர் வெண்டும்" என்றேன். பலத்த கரகோசத்துடன் அதேப் பாடல் மீண்டும் பாடப் பட்டது.



அன்று விழா முடிந்ததும் வழக்கம்போல மதுமிதாவை பஸ்ஸ்டாப்பில் ஸீ ஆ·ப் பன்ன நின்றிருந்தேன். என்னைப் பார்த்ததும் நேராக என்னிடம் வந்தவள்.. "மிஸ்டர் சித்தார்த் நான் உங்களுக்கு என்னத் தப்பு பன்னினேன் ஏன் என்னை ஓட ஓட விரட்டுகிறீர்கள்..ப்ளீஸ் இன்னையோட என்னை விட்டு விடுங்கள்.. நான் என்னை அறியாமல் ஏதாவது தப்பு செய்திருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இன்னொரு முறை என்னிடம் இப்படி பிஹேவ் பன்னினால் நான் ரிஸைன் பன்னிட்டுப் போவதைத் தவிர வேற வழியில்லை" என்றாள்.


எனக்கு பயங்கர அதிர்ச்சி.. எதுவுமே பேசமுடியலை.. அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் ஹாஸ்டல் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அதன் பின் 15 நாட்களுக்கு நான் மதுமிதாவின் கண்களிலெயேப் படவில்லை..


ஒருநாள் நாங்கள் நன்பர்கள் எல்லோரும் புதிதாக ரிலீஸ் ஆகியிருந்த "சாமரம்" எனும் மலையாளப் படம் சென்றோம். பிரதாப் போத்தன், ஜரினாவஹாப் நடித்தது. ப்ரதாப் காலெஜ் ஸ்டூடன்ட் ஜரினா லெக்சரர்.. இருவரும் ப்ரதாப் ஜரினாவைக் காதலிப்பதாகக் கதை.. அது என்னை மிகவும் பாதித்தது.. படம் முஇந்தும் 2,3 நாள் அதே நினைவாக இருந்தது.


பின் ஒரு முறை என்எஸ்எஸ் க்காக பக்கத்தில் உள்ள கிராமத்தை சுத்தம் செய்ய எங்கள் கல்லூரி மாணவர்கள் சென்றோம். அங்கு மதுமிதாவும் வந்திருந்தாள். அவளை கிடத் தட்ட 20 நாட்களாக நான் பார்க்கவேயில்லை. மதியம் சாப்பிடும் போது என் அருகில் வந்தாள். "என்ன சித்தார்த்.. என்னை கலாட்டா பன்ன வேண்டாம் என்றுதானே சொன்னேன்.. என் பக்கமேத் திரும்ப மாட்டேன் என்கிறீர்கள்.. கோபமா" என்றாள். நான் " அதெல்லாம் ஒன்றுமில்லை மேடம் நான் சும்மா விளையாட்டா ஏதோ செய்யப் போய் அது உங்களை ஹர்ட் பன்னிடுச்சென்னு வருத்தம்.. த்ட்ஸ் ஆல்" என்று சொன்ன்னேன்.ஆனால் இந்த 20 நாளில் நான் என்னையறியாமல் மதுமிதாவை நேசிக்கிறேனோ என எனக்குள் பயம்.. காதல் கத்தரிக்காய் எல்லாம் நம்பாத வயது.. கொஞ்ச நேரத்தில் அவளை சீண்டிப் பாக்கலாமே என " மேடம் சாமரம் ன்னு ஒரு மூவி வந்திருக்கு பாத்தீங்களா.. சூப்பர்ப் மூவி.. மிஸ் பன்னாதீங்க" என்றேன். மாலை கலையும் நேரத்தில் அவளிடம் மீண்டும் சாமரம் பாக்கச் சொல்லிவிட்டு பைக்கில் நான் ஹாஸ்டல் வந்துவிட்டேன்.


3 நாட்கள் கழித்து நாங்கள் ஆடிட்டோரியம் படியில் உட்கார்ந்து தம் அடித்துக் கொண்டிருந்தோம். திடீரென மதுமிதா அங்கு வந்தாள். " சித்தார்த் ஒரு நிமிடம் வரமுடியுமா?" என்றாள். நான் அவளுடன் கேன்டீன் சென்றேன். அங்கு யாரும் இல்லாத 5 ஆவது ஹாலுக்குச் சென்று ஒரு ஓரமாக அமர்ந்தாள். என்னையும் உட்காரச் சொன்னாள். நேராக என்னிடம் " உன் மனசில என்ன நினைச்சுக்கிட்டு இருக்க.. ஆர் யூ இன் லவ் வித் மீ? சொல்லு.. நான் உன்னைவிட வயசில பெரியவ.. நீ ஸ்டூடன்ட் நான் லெக்சரர்.. எதை வச்சு இப்படி ஒரு எண்ணம் உனக்கு வந்தது.." என்றாள்.

நான் பதிலுக்கு " ஹலோ நான் தானே லவ் பன்றேன் பதிலுக்கு நீங்களும் என்னை லவ் பன்னனும்னு சொன்னேனா? உங்களுக்கு தொல்லைத் தரக்கூடாதுன்னுதான் நான் விலகி வந்துட்டேன்ல.. இப்பா நீங்களாதான் என்னைக் கூப்பிட்டுப் பேசுறீங்க.. எஸ் ஐ லவ் யூ.. அன்ட் ஐ வில் பி லவ்விங் யூ எவெர்.. டில் தெ என்ட் ஆ·ப் மை லை·ப் " என்றேன்.

அவள் கண்கள் கலங்க " சித்தார்த் ப்ளீஸ் லிசன் மீ.. நான் ஒரு விடோ.. எம்.எஸ் சி படிக்கும்போதே எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு.. கல்யானம் ஆன 2 மாதத்திலேயே புருசனை பலிக் கொடுத்துட்டு விதவையா இருக்கேன். என்னால இன்னொரு ஆள நினச்சுக் கூடப் பாக்க முடியாது.. என் துக்கத்தைக் கரைச்சுக்கத்தான் நான் வேலைக்கு வரேன்.. ஆனால் இங்கேயும் இப்படியா?.. என்னை ஆண்டவன் ஏன் இப்படி சோதிக்கிறான்னு தெரியலை.. ப்ளீஸ் லீவ் மீ.. என்னை விட்டுடு" என நா தழுத்தழுக்கச் சொன்னாள்.


நான் பயங்கர அதிர்ச்சியடைந்தேன்.. இவள் வாழ்க்கை இத்தனை சோகமானதா.. அந்த சோகம்தான் அவள் கண்களில் எப்போதும் தெரிவதா?.. அந்த கணமே முடிவுக்கு வந்தேன்.. எப்படியாவது மதுமிதாவின் மனதை மாற்றி அவளை வாழ்க்கைத் துனையாகக் கொள்ள வேண்டும் என்று.


ஒரு நாள் மதியம் காலேஜ் விடும் நேரம் பஸ்ஸ்டாப்பில் நின்றிருந்தேன். மதுமிதா வழக்கமாகச் செல்லும் 36A கிளம்பத் தயாராக இருந்தது. அப்போதுதான் மெயின் பில்டிங்கை விட்டு மதுமிதா வெளியே வந்தாள். பஸ் ஸ்டாப் வர எப்படியும் 3 நிமிடங்கள் ஆகிவிடும். அப்போது பஸ் மெல்ல நகர ஆரம்பித்தது.


நான் வேகமாக ஓடி பஸ்ஸில் ஏறி டிரைவரிடம் பஸ்ஸை நிறுத்தச் சொன்னேன். அது அந்த வயதும் கல்லூரியும் தந்த தைரியம்.. டிரைவரும் எதற்கு வம்பு என நிறுத்தி வைத்தார். மதுமிதா வந்து பஸ்ஸில் ஏறியதும் நான் டிரைவரிடம் 'தேங்க்ஸ் அண்ணா" என சொல்லிவிட்டு அவளைப் பார்க்காமல் கீழே இறங்கிச் சென்றேன்.


அடுத்த நாள் கேன்டீனில் என்னைப் பார்த்த மதுமிதா என்னிடம் வந்து என்னை ஒரு நிமிடம் தன்னோடு வெளியே தனியாக வரச் சொன்னாள். வெளியே வந்ததும் " சித்தார்த் என் நிலமையை எடுத்துச் சொல்லியும் ஏன் என் வாழ்க்கையில் குறுக்கிடுறீங்க.." என்றாள். நான் அதற்கு "மேடம் எனக்கு ஒன்னுமே புரியலை நான் இப்ப என்ன செஞ்சேன் என என்னிடம் இப்படி சொறீங்க. நான் தான் உங்கள் வழிக்கே வருவதில்லையே" என்றேன்.


அவள் "நான் நேற்று பஸ்ஸை நிறுத்தி வைத்ததிற்குச் சொன்னேன். அந்த கண்டக்டர் என்னை எவ்வளவு அசிங்கமாப் பார்த்தான் தெரியுமா? உனக்கு ஒன்னுத் தெரியுமா அது என் அப்பாவிற்கு சொந்தமான பஸ் அந்த டிரைவர் கண்டக்டர் எல்லாம் எங்கக் கிட்ட வேலைக்கு இருக்கிறவங்க. நான் நினைச்சா தினம் நான் வரும் வரை அவங்களை எனக்காகக் காத்திருக்கச் சொல்ல முடியும்.. ஆனால் நீங்க அவங்க முன்னாடி எனக்காக பஸ்ஸை நிறுத்தி வைக்கச் சொல்லி என் மேல் அவங்களுக்கு இருந்த அபிப்ராயத்தைக் கெடுத்திட்டீங்க.. எனக்கு நேற்று ரொம்ப அவமானமாப் போச்சு" என்றாள். நான் அதற்கு "சாரி நான் உங்களுக்காக பஸ்ஸை நிறுத்தினாலும் அதுப்பற்றி உங்கள் கிட்ட பெருமையா எதுவும் சொல்லிக்கலை.. நிச்சயமா இதோப் பார் உனக்காக பஸ்ஸை நிறுத்தி வச்சிருக்கேன் என்கிற மாதிரி நடந்துக் கொள்ளவும் இல்லை. அந்த பஸ் போயிடுச்சுன்னா உங்க ஏரியா போற அடுத்த பஸ் 1/2மணி நேரம் மேல் ஆகும் என்றுதான் நிறுத்தி வைத்தேன் அதுவும் நீங்க பஸ் ஸ்டாப் நோக்கி வருவதைப் பார்த்தப் பின்தான் அப்படி செய்தேன். தப்பாப் பட்டிருந்தால் மன்னிக்கவும். தெரிஞ்சவங்களுக்கு செய்யுற ஒரு ஹெல்ப் மாதிரித்தான் நினைச்சேன்." என்று சொல்லிவிட்டு என் நன்பர்கள் இருந்த இடம் நோக்கி வேகமாக்ச் சென்றுவிட்டேன்.


ஒரு முறை எங்கள் கல்லூரிக்கும் கவர்ன்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜுக்கும் நடந்த ஹாக்கி மேட்ச் தகராறில் முடிந்தது. அவர்கள் ஹாக்கி டீம் எங்களுடையதைவிட சிறந்த அணி ஆனால் அன்றையத் தகறாறிற்கு அவர்கள் மீது தப்பிருந்ததால் எங்களுக்கு வெற்றி என அறிவிக்கப்பட்டது. இதனால் எங்கள் கல்லூரி மீது அவர்கள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழ்நிலை உறுவானது. இந்நிலையில் எங்கள் கல்லூரியின் ஃபைன் ஆர்ட்ஸ் ஆரம்பிக்கப்பட்டு அன்று வெள்ளிவிழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. என் ரூம் மேட்தான் ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப் செக்ரட்டரி என்பதால் நானும் அவனுடன் நின்று அனைத்து வேலைகளையும் செய்துக் கொண்டிருந்தேன்.


அப்போது 4,5 வேன்களில் கவர்ன்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ் மாணவர்கள் கைகளில் ஹாக்கி ஸ்டிக் உருட்டுக் கட்டை சகிதம் கிடு கிடு வென எங்கள் கேம்பஸ¤க்குள் வந்தவர்கள் நேராக ஆடிட்டோரியம் உள்ளே நுழைந்தனர். அவர்கள் சுமார் 50 பேர்கள் இருப்பார்கள். எங்கள் காலேஜ் விழாக்களில் முதல் 20 வரிசைகளில் பெண்களே எப்போதும் அமர்வார்கள். அந்த விழாவை முன்னின்று நடத்தியது எங்கள் செட் என்பதால் சூழ்நிலையின் விபரீதம் அறிந்து நாங்கள் 10 பேர் கவர்ன்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ் மாணவர்களிடம் அவர்கள் ஆடிட்டோரியம் உள்ளே வரக்கூடாதென்றும்.. உள்ளே உள்ள பெண்கள் பத்திரமாக வெளியேறட்டும் அதன் பின் நாங்கள் எங்கள் ஹாக்கி டீமை அழைக்கிறோம் எதுவாயிருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம். எங்கள் மீது தப்பிருந்தால் நாங்கள் எழுத்து மூலமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என சமாதானமாகப் பேசிக் கொண்டிருந்தோம்.


அதற்குள் 4 பேர் மேடையில் ஏறி அங்கு பாட்டுப் பாடிக் கொண்டிருந்த எங்கள் காலேஜ் பையனை கட்டையால் அடித்து விட்டார்கள். இதைப் பார்த்ததும் நான் மேடைக்கு ஓடி அவர்களைத் தடுத்தேன். மைக்கைப் பிடித்து எல்லாப் பெண்களையும் வலது புறம் இருக்கும் வாசல் வழியாக கேன்டீனுக்குள் பத்திரமாகச் செல்ல சொல்லிக் கத்தினேன். மாணவர்களை பாதிப் பேர் பெண்களுக்கு காவலாக இருந்துக் கொண்டு மீதிப்பேர்களை முன்பக்கம் வரச் சொன்னேன். அப்போது மேடையில் நின்ற வெளிக் கல்லூரி மானவர்களில் ஒருவன் இவனைப் போடுங்கடா முதல்ல என்று கத்தியவாறு என் தலையில் ஹாக்கி ஸ்டிக்கால் ஓங்கி ஒரு அடி அடித்தான். இன்னொருவன் மைக் ஸ்டான்டைப் பிடுங்கி என் தோள் பட்டையில் ஒரு அடி கொடுத்தான். யாரோ என் முதுகில் எட்டி உதைக்க நான் மேடையிலிருந்து பெண்கள் அமர்ந்திருந்த வரிசைக்கருகே (சுமார் 8 அடி தள்ளி) வந்து விழுந்தேன். அரை மயக்கத்தில் இருந்தாலும் அப்போது எங்கள் கல்லூரி மாணவிகளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதென்பது மட்டுமே முக்கியமாகப் பட்டது.


அதற்குள் எங்கள் மாணவர்கள் சுமார் 250 பேர் முன்னால் ஓடி வந்துவிடவே நாங்கள் பெண்களை பத்திரமாக பின் வழியாக கேன்டீனுக்குள் அபுப்பினோம். மேடையிலும் ஆடிட்டோரியத்திற்கு வெளியேயும் ஒரே கலவரம். என் கையெலும்பு முறிந்துப் போனதாலும் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியதாலும் எனக்கு மயக்கம் வந்துவிட்டது. என் முகத்தில் தண்ணீர் தெளித்து சில மாணவர்கள் என்னையும் கேண்டீனுக்குள் தூக்கிச் சென்றனர். சற்று நினைவு வரவும் நான் நடந்து வருகிறேன் என்று சொல்லி இறங்கி கைத்தாங்கலாக நடந்து கேன்டீனுக்குள் வந்தேன். .



நான் அந்த நிலையிலும் என் நன்பர்களிடம்.. "மச்சான் அவங்க 50 பேர்தான் ஒருத்தனுக்கு நாம 10 பேர்னு சேர்ந்தாக்கூட ஈசியா சமாளிக்கலாம்.. அவங்க அத்தனைப் பேரையும் ஆடிட்டோரியம் உள்ளே வைத்துப் பூட்டுங்க..போலீஸ¤க்கு இன்·பார்ம் பன்னிடுங்க.. அவங்க யாரையும் நாம அடிக்க வேண்டாம் எவ்வளவு சீக்கிறம் அவங்களை உள்ளேத் தள்ளி பூட்டுரோமோ அவ்வளவு சீக்கிறம் நமக்கு நல்லது." என்று கூறினேன்.


எங்கள் மாணவர்கள் என் திட்டப் படி அத்தனை வெளி மாணவர்களையும் ஆடிட்டோரியத்தில் அடைத்துவிட்டு போலீஸ¤க்கும் சொல்லி விட்டார்கள். கேன்டீன் உள்ளே மாணவிகளுடன் எங்கள் கல்லூரி ஆசிரியைகளும் இருந்தனர். இதனிடையே நான் அடிப்பட்டதை தெரிந்து அங்கு வந்த மதுமிதா யாரோ ஒரு மாணவியிடம் துப்பட்டாவை வாங்கி என் தலையில் கட்டுப் போட்டாள். தலையை விட தோள் பட்டையில்தான் அடி பலம் எலும்பும் முறிந்திருந்தது. நான் என் நன்பன் ஒருவனை பைக் எடுத்து வாடா டாக்டரிடம் போகலாம் என்றேன். என் டீ சர்ட்டை மீறி தோள் பகுதியில் இரத்தம் கசிந்து வந்தது.. ஒரு மானவன் முதலுதவிப் பெட்டியைத் தூக்கி வந்து அதிலிருந்து காட்டன் எடுத்து ஏய் சட்டையக் கழட்டு கிளீன் பன்னிட்டு டாக்டரிடம் போகலாம் ரொம்ப ப்ளீட் ஆகுதுப் பார் என்றான். என்னால் என் கைகளை அசைக்கக் கூட முடியவில்லை. யாரோ கேன்டீனில் இருந்து ஒரு கத்திரிக்கோல் எடுத்து வந்தார்கள் என் சட்டையை கட் பன்னி திறந்தால் உள்ளே எலும்பு முறிந்து வெளியே துருத்திக் கொண்டுத் தெரிந்தது. ஒரு மானவன் "யாரும் கை வைக்காதீங்க ..அப்படியே அசைக்காமல் ஹாஸ்பிடல் கொண்டுப் போயிடலாம் யாராவது இன்னொரு துப்பட்டா தாங்க கையைக் கட்டனும்" எனக் கத்தினான்.


மதுமிதாதான் யாரிடமோ இருந்து துப்பட்டா வாங்கி வந்தாள். என் அருகே வந்தவள் என் தோள் பட்டையைப் பார்த்ததும் மயங்கி சரிந்தாள்.


எனக்கு வலி ஒரு பக்கம்.. மதுமிதா மயங்கி விழுந்தது ஒரு பக்கம்.. தவித்துப் போனேன். யாரோ டே - ஸ்காலர் கார் வைத்திருப்பவனைப் பிடித்து காரை எடுத்து வந்தார்கள்.. என்னைக் கைத்தாங்கலாக காருக்கு நடத்தி பின் ஹாஸ்பிடலுக்கு கூட்டிச் சென்றனர். நான் அத்தனை வலியிலும் மதுமிதா மயங்கி விழுந்ததும் அதிர்ச்சியடைந்து அந்த நினவிலேயே மூழ்கிக் கிடந்தேன். இவ்வளவு நாள் அந்த வயதில் வரும் திமிரினால் இவளை மடக்கிக் காட்டனும்னு பன்னிய கலாட்டா வேற.. ஆனால் என் வலியைப் பார்த்து தாங்காமல் ஒருத்தி மயங்கி விழுந்தாளா? என்று யோசிக்கும்போது ஏற்படும் சந்தோசம் வேறு. எனக்கு தோள் பட்டையில் சர்ஜரி செய்து எலும்பை சேர்த்து வைத்தனர். சர்ஜரி என்றதும் என் பெற்றோருக்கு செய்தி சென்று அவர்கள் வந்தனர். நடந்த சம்பவத்தை விசாரித்து என் அப்பா எனக்கும் என் நன்பர்களுக்கும் அட்வைஸ் செய்தார்.


2 நாள் கழித்து மதுமிதா என்னைப் பார்க்க வந்தாள். என்னிடம் இப்ப எப்படி இருக்கீங்க என் ஃபார்மலா விசாரித்துவிட்டு என் அம்மாவிடம் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தாள். அன்று நான் தலயிடாவிட்டால் எங்கள் கல்லூரி மாணவிகளின் நிலை மிக மோசமாயிருக்கும் என பெருமையோடு சொன்னாள். என் அப்பாவையும் அம்மாவையும் தன் வீட்டிற்கு அழைத்தாள். அவர்கள் இன்னொரு முறை வருவதாகச் சொல்லவும் மறுத்து நாளை ஞாயிற்றுக் கிழமை தானே வந்து அவர்களை மதிய சாப்பாட்டிற்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லி சென்றாள்.


மறுநாள் பகல் 11 மணிக்கெல்லாம் ஒரு காரில் என் பெற்றோரை அழைத்துச் செல்ல வந்தாள். 12.30 வரை எங்கள் ரூமில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். என் அப்பாவிடம் என்னைப் பற்றி நல்லவிதமாக ஒப்பினியன் சர்டி·பிகேட் தந்தாள். அங்கு என்னோடு இருந்த என் ரூம் மேட்டிற்கு ஆச்சர்யம்.. என்னடா இவள் இவ்வளவு நேரம் இருக்காளே என்று.


அன்றைக்கு இரவு என் பெற்றோர்கள் சென்னைத் திரும்புவதாக இருந்தனர். மீண்டும் அடுத்த சனி வருவதாகச் சொன்னார்கள்.


நான் ஹாஸ்பிடலில் இருந்த 15 நாட்களில் 10 முறைக்கு மேல் வந்து விட்டாள்.. என் பெற்றோர்கள் இருக்கும் நாட்களில் தனியாக வந்தவள் மற்ற நாட்களில் யாராவது மாணவிகளையோ லெக்சரர்களையோ துனைக்குக் கூட்டி வந்தாள். என்னோடு என்
உடல் நிலைத் தவிர மற்ற விசயங்களைப் பேசுவதைத் தவிர்த்தாள்.



இத்தனை நாட்கள் நான் அந்த வயதில் இருக்கும் மற்றக் கல்லூரி மாணவர்களைப் போலவே சும்மா ஒரு ஜாலிக்காக மதுமிதாவைக் கலாட்டா பன்னி வந்திருந்தேன் ஆனால் முதன் முதலில் அவள் ஒரு விதவை எனத் தெரிந்தப் போது அவளை கிண்டல் பன்னுவதை நிறுத்திவிட்டேன். மெல்ல அவள் மீது ஒருவித பற்றுதல் வளர்ந்தது. அன்று என் காய்த்தைப் பார்த்து மயங்கி விழுந்தத்தருனம் நான் என்னை அவள் வசம் இழந்து விட்டேன். அது முதல் சீரியசாக காதலிக்க ஆரம்பித்து விட்டேன். அவளை ஜொள்ளு விட்டெல்லாம் மயக்க முடியாது என்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது. நான் இந்த காலேஜ் மாணவனாக இருக்கும் வரை அவள் மனதை மாற்ற முடியாது என்றும் தெரியும். இன்னும் 6 மாதம் அப்புறம் எப்படியும் அவளைக் காதலிக்க வைக்க முடியும் என நம்பினேன். இந்த 6 மாதத்தில் அவள் மனம் கவரும் படி நடந்துக் கொள்ள முடிவு செய்தேன். இப்போதெல்லாம் என்னைப் பார்க்கும் போது ஒருவித நட்போடு சிரிக்கச் செய்தாள். நானும் அவள் முன்னால் தம் அடிப்பதை நிறுத்திவிட்டேன்.



நான் ஹாஸ்பிடலில் இருந்து திரும்பி 1 மாதம் கழித்து எங்கள் காலேஜில் அனைத்துக் கல்லூரி களிடையே நடைபெற்ற பெண்களுக்கான பேட்மிட்டன் டோர்னமென்ட் நடை பெற்றது.. எங்கள் காலேஜில் ந·பிஸா என்றப் பெண் சிறந்த வீராங்கணை.. யுனிவர்சிட்டி அணியில் விளையாடுபவள்.. நாங்கள் அனைவரும் அவளுக்கு சப்போர்ட் பண்ணி அவளை எதிர்த்து விளையாடிய பெண்ணை பயங்கரமாக கலாய்த்துக் கொண்டிருந்தோம். எங்கள் கலாட்டாக்களை மதுமிதா கவணித்துக் கொண்டே இருந்தாள். ஒருக் கட்டத்தில் பொருக்க முடியாமல் எழுந்து எங்களிடம் வந்து என்னை வெளியே சற்று வரச் சொல்லி சென்றாள். வளியே வந்த என்னிடம் "சித்தார்த் நீங்க என்ன ரவுடியா? ஒரு பெண்ணை எந்த அளவு கிண்டல் பன்னுவது என அளவேயில்லையா" எனக் கடிந்துக் கொண்டாள். நான் பதிலுக்கு "மேடம் அங்க நம்ம காலேஜ் பையன்கள் அத்தனைப் பேரும் கத்திக்கிட்டு இருக்காங்க.. அது என்ன என் மீது மட்டும் அக்கறை?" எனக் கேட்கவும் பதிலுக்கு ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிட்டாள்.


எங்கள் ஹாஸ்டல் டே மிகவும் சிறப்பாக இருக்கும். அன்று மட்டும் ஹாஸ்டலுக்குள் பெண்களுக்கு அனுமதி உண்டு. இரவு ஓப்பன் ஏர் டின்னர். ஒவ்வொறு மாணவரும் 4 கெஸ்ட் வரை அழைத்து வரலாம். நான் மதுமிதாவை என் கெஸ்டாக ஹாஸ்டல் டேக்கு அழைத்தேன். அவளும் வர சம்மதித்தாள்.


மாலை 5 மணியளவில் வந்தாள். நான் என் ரூமிற்கு அழைத்து வந்தேன். என் ரூம் மேட் ஹஸ்டல் டே விழா ஏற்பாட்டில் மும்மூரமாக இருந்தான். " மேடம் இந்த 3 வருசத்தில் எனக்குக் கிடைத்த ஒரே கேர்ள் ·பிரன்ட் நீங்கத்தான்.. எனக்கு வாழக்கையில் பெரிய லட்சியம் இருக்கு. 5 வருசமா அதை உறுதியா காத்திகிட்டு வரேன். அதலால நான் எந்த ஒரு பெண்ணையும் காதல் கொண்டு பார்க்கிறதில்லை. சும்மா கல்லாட்டாவிற்காக கிண்டலடிப்பேன் அவ்வளவுதான். இதலாலேயே எனக்கு கேர்ள் ·பிரன்ட்டும் அமையலை. ஓ.கே அது கிடக்கட்டும் என் லட்சியம்னு சொன்னேனே அதுப்பற்றி உங்கள் கிட்ட பேச இது நல்ல சந்தர்ப்பம் என நினைக்கிறேன். உங்களுக்குத் தெரிஞ்சுக்க விருப்பம் என்றால் சொல்கிறேன்" என்றேன். அவள் ஆஇர்வம் காட்டவே நான் என் சூட்கேஸிலிருந்து பழைய டைரிகள் சிலவற்றை எடுத்தேன்.


முதல் டைரி 5 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. நான் 10ம் வகுப்பு படிக்கும்போது என நினைக்கிறேன். எனக்கு முதல் முதல் அந்த எண்ணம் வந்தது. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டுமென்றால் ஒரு அநாதைப் பெண்ணையே மணப்பது என்ற முடிவுக்கு வந்தேன். அதை அந்த டைரியில் எழுதியிருந்தேன். அதை மதுமிதாவிடம் காட்டினேன். பின் அடுத்த டைரியில் எழுதியதைக் காட்டினேன். அதில் என் பெரியம்மா மகள் இளம் வயதில் விதவையானதும் அவளை என் சொந்தத்தில் ஒருவர் மறுமணம் செய்த நிகழ்ச்சியையும் எழுதியிருந்தேன். அந்த சமயத்தில் என் பெரியம்மா வீட்டினர் அடைந்த சந்தோசமும் அந்த கல்யான மாப்பிள்ளையின் செயலுக்கு மற்றவர்கள் பாராட்டிய வார்த்தைகளும் என்னை மிகவும் பாதித்ததால் அந்தத் தருனத்திலேயே நான் கல்யானம் செய்துக்கொண்டால் ஒரு விதவையைத் தான் செய்வது என என் முடிவை மாற்றிக் கொண்டதையும் எழுதியிருந்தேன்.


அதன் பிறகு ஒவ்வொரு வருட டைரியிலும் முதல் தேதி அன்று மட்டும் என் இந்த லட்சியத்தை குறிப்பிட்டு ஆண்டவன் விரைவில் எனக்கு ஒரு விதவைப் பெண்ணைக் காட்டுவான் என அடிக்குறிப்பிட்டிருந்தேன்.


நான் காட்டியவற்றைப் பொருமையாகப் பார்த்த மதுமிதா என்னிடம் "சித்தார்த் உங்கள் எண்ணம் மிக உயர்ந்தது.. நிச்சயம் நான் பாராட்டுகிறேன்.. நானும் கடைசிவரை தணியாகவேக் காலம் தள்ள முடியாது என்றாவது யாரையாவது திருமனம் செய்துக்கொள்ள வேண்டியதுதான்.. ஆனால் நான் என்னைவிட வயதில் குறைந்த ஒருவனை அதுவும் நான் ஆசிரியையாகப் பணியாற்றும் காலேஜ் மாணவனைக் கல்யானம் செய்துக் கொள்ள்வதை என் மனசாட்சி ஒத்துக் கொள்ளாது.. உன்னால் என்னிடம் ·பிரன்ட்ல்யா பழக முடியும் என்றால் பழகு.. இல்லாவிட்டால் நாம் இப்போதே பிரிந்துவிடலாம்" என்றாள்.

அன்று ஹாஸ்டல் டே சமயத்தில் மதுமிதா என்னிடம்"நான் ஆசிரியையாகப் பணியாற்றும் காலேஜ் மாணவனைக் கல்யானம் செய்துக் கொள்வதை என் மனசாட்சி ஒத்துக் கொள்ளாது.. உன்னால் என்னிடம் ·பிரன்ட்ல்யா பழக முடியும் என்றால் பழகு.. இல்லாவிட்டால் நாம் இப்போதே பிரிந்துவிடலாம்" என்றாள்.


நான் அவளிடம் என்னை மாற்றிக் கொள்ள கொஞ்சம் டைம் வேண்டும் என்று சொன்னேன். அவ்வாறு சொன்னதன் மூலம் நான் அவளைக் காதலிப்பதைத் தெரிவித்துவிட்டதாக உணர்ந்தேன். அதே நேரத்தில் அவள் சொல்வதற்காக உடனடியாக நான் என் காதலி விட்டு விட தயாராக இ¢ல்லை என்பதையும் உணர்த்தினேன். ஆனால் அன்று இரவு விருந்தில் மதுமிதா கலந்துக் கொள்ளவில்லை.. அவ்வாறு சென்றதால் நான் மனதுடைந்து போனேன். எப்படி அவளை என் காதலை ஏற்றுக்கொள்ளச் செய்வது என தெரியாமல் குழம்பினேன்.


ஹாஸ்டல் டே முடிந்து சில நாட்கள் நான் மதுமிதாவைப் பார்ப்பதை தவிர்த்து வந்தேன். கல்லூரி இறுதி நாட்கள் வந்தன. கடைசி வருடத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஆட்டோகிரா·ப் வாங்குவதில் மும்மூரமாக இருந்தனர். அன்று ஒரு சனிக்கிழமை.. நார்மலாக சனிக்கிழமைகளில் கல்லூரியே வெரிச்சோடிக் கிடக்கும்.. சயின்ஸ் லேப்பில் எம்.பில் மானவர்கள் சிலர் ஏதாவது செய்துக் கொண்டிருப்பார்கள். கேன்டீனில் டீ மட்டும் கிடைக்கும். நான் டீ குடிப்பதற்காக கேன்டீன் சென்றேன். என்ன ஆச்சர்யம்.. மதுமிதா அங்கு இருந்தாள்.. என்னைப் பார்த்ததும் "ஹய்" என்றாள். நானும் பதிலுக்கு சிரித்துக் கொண்டே எப்படி இருக்கீங்க? என்றேன். "ம்ம்ம் இருக்கேன் ஸ்டடீசெல்லாம் எப்படிப் போகுது?" என்றாள். நான் " ம்ம்ம் போய்கிட்டு இருக்கு எனக்கு ஒரு ஹெல்ப் பன்ன முடியுமா?" என்றேன் என்ன என்றாள்..


நான் பைக்கிலிருந்து ஒரு புது ஆட்டோகிரா·ப் புக் எடுத்து வந்து அவளிடம் கொடுத்து "நான் உங்களை டிஸ்டர்ப் பன்றதா நினைக்க வேண்டாம்.. இன்னும் 1 மாசம்தான் நான் இந்த காலேஜ் ஸ்டூடன்ட். அப்புறம் உங்களாஇப் பொறுத்தமட்டில் நான் ஒரு வெளி ஆள்.. நிச்சயமா உங்கள் சம்மதமில்லாமல் உங்க லை·பில் குறுக்கே வர மாட்டேன். அதனால் உங்க மனதில் என்னைப் பற்றி என்ன நினைக்கிறீங்களோ அதை எழுதித் தர முடியுமா? கட்டாயம் நான் இதை யாரிடமும் காட்ட மாட்டேன்.. இந்த புக்கில் உங்க ஆட்டோகிரா·ப் மட்டுமே இருக்கும்" என சொல்லி அவளிடம் கொடுத்துவிட்டுச் சென்றேன்.


2 நாட்கள் கழித்து நாங்கள் ஆடிடோரியம் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தோம். மதுமிதா கேன்டீன் சென்றுக் கொண்டிருந்தாள். நான் அவளிடம் சென்று " மேடம் என் ஆட்டோகிரா·ப்?" என்றேன். அவள் ஹேன்ட் பேக்கிலிருந்து என் ஆட்டோகிரா·ப் புக்கை எடுத்துக் கொடுத்துவிட்டு " சீ யூ லேட்டர் " என்று சொல்லி சென்றுவிட்டாள். அதை அவசர அவசரமாகப் பிரித்தேன்.. முதல் பக்கத்தில் "ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்... மதிமிதா " என எழுதி முடித்திருந்தாள். மற்றப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன் எதுவும் எழுதப்படாமல் இருந்தன..


ஏமாற்றம்.. அவமானம் வெறுப்பு எல்லாம் ஒன்று சேர என் நன்பர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தேன். அங்கே என் நன்பர்களில் ஒருவனான எந்நேரமும் கஞ்சா அடித்துக் கொண்டிருக்கும் சபாபதி அப்போதுதான் ஒரு சிகரெட்டில் ஸ்ட·ப் போட்டுப் பத்தவைத்தான் " மச்சான் அதக் குட்டுடா மனசே சரியில்லை" என அவனிடமிருந்து கஞ்சா சிகரெட் வாங்கி ஒரு இழு இழுத்தேன். 10 நொடிகளில் ஜிவ்வ்வ்வ்வ்வ் வென மிதக்க ஆரம்பித்தேன். மனது அமைதியானதுப் போலத் தெரிந்தது. இன்னும் 4 இழு குடித்ததும் இந்த உலகை விட்டே மேலே பறந்துச் சென்றதுப் போல இருந்தது.


அப்போது அந்த இடத்திற்கு வந்த என் ரூம் மேட் பாலா என் நன்பர்களைப் பார்த்து ஏன் எனக்கு கஞ்சா கொடுத்தனர் என சத்தம் போட்டான்.. என்னிடம் " டேய் மச்சான் காலேஜ் முடியுற நேரம் வந்தாச்சு இப்ப புதுசா ஒரு பழக்கம் தேவையா? சரி வா ரூமிற்குப் போய் படுக்கலாம் கொஞ்ச நேரம்" என என்னை இழுத்துக் கொண்டுப் போனான். நான் பைக்கில் கீயை செறுக முடியாமல் தள்ளாடினேன். " ஏன்டா உனக்குத் தேவையா இதெல்லாம்" என்றான். நான் சோகம் தாங்க முடியாமல் மதுமிதா எழுதிக் கொடுத்த ஆட்டோகிரா·ப் பற்றி அவனிடம் சொன்னேன் .. என் காதல் விசயம் பாலாவிற்குத் தெரியும். அவன் ஆறுதலாக "மச்சான் சரியாகிடும்டா.. நீயே அன்னைக்குப் பாத்தீல்ல உனக்கு அடிப்பட்டதும் எப்படி மயங்கி விழுந்தா.. எத்தனை முறை ஹாஸ்பிடல் வந்தால்.. அவ நிலையில் இருந்து யோசித்துப் பாரு.. வாழ்க்கையை இழந்துட்டு நிக்கிற விடோ.. பாவம்டா கொஞ்சம் பொருமையா அனுகு" என்றான்.


அவன் சொன்னது எனக்கு ஆறுதல் தருவதிற்குப் பதில் வெறு விதமாக வேலை செய்தது.. "பைக்கை ஸ்டார்ட் செய்த நான்.. மச்சான் நீ சொன்னது சரிடா.. எனக்கு உடம்புக்கு ஏதாவது வந்துட்டா அவ உருகி உருகிப் பாத்துப்பாடா.. இப்பப் பாரு " எனச் சொல்லி மிக வேகமாக கிரவ்ண்ட் நோக்கி ஓட்ட ஆரம்பித்தேன்.


எங்கள் கல்லூரி மைதானம் மற்ற தளங்களைவிட 8 அடி உயரத்தில் அமைந்திருக்கும். கேன்டீன் பக்கத்தில் அதற்குச் செல்ல 10 படிகள் கொண்ட படிக்கட்டுகள் இருக்கும். ஒரு மூலையில் சின்ன ரேம்ப் இருக்கும். சர்ரென்று ரேம்ப் வழியாக மைதானத்தில் ஏறிய நான் ஒரு 200 மீட்டர் சென்று திருப்பிக் கொன்டு 60 கி.மீ வேகத்தில் வந்து படிக்கட்டு வழியாகக் கீழேப் பாய்ந்து விழுந்தேன். என் உடல் முழுதும் காயங்கள்.. ஈண்டும் தல உடைந்து ரத்தம்.. பாலாதான் மீண்டும் என்னை ஒரு ஹாஸ்பிடலுக்கு எடுத்துச் சென்றான். அன்று மாலை என்னைப் பார்க்க மதுமிதா வந்திருந்தாள்.


என் உடல் முழுதும் காயங்கள் மூக்கிலும் உதட்டிலும் தையல் போட்டிருந்தனர். தலையில் ஒரு பெரியக் கட்டு. என்னைப் பார்த்ததும் மதுமிதா அழ ஆரம்பித்து விட்டாள். பாலா நாசுக்காக வெளியே சென்றுவிட்டான். என் அருகே வந்தவள் குணிந்து என் நெற்றியில் முத்தம் கொடுத்தாள்.. "சித்தார்த்.. ஏன் இப்படி பன்னின நான் உன்னை வம்பு வழக்கத்தான் அந்த ஆட்டோக்ரா·பில் ஒன்றும் எழுதாமக் கொடுத்தேன். இங்கப் பாரு உனக்காக் வேற ஆட்டோக்ரா·ப் வாங்கி எழுதி வந்திருக்கேன். நீ அந்த ஆட்டோகிரா·ப் பார்த்துக் கோபப்படுவே அப்புறமா இதைக் காட்டலாம் என இருந்தேன்.. ஏன் அவசரப்பட்டு இப்படி செஞ்ச.. நல்ல வேளை பெருசா ஒன்னும் ஆகலை. இன்னும் 1 மாதத்தில் எக்ஸாம் வருது.. உன் அப்பாவோட சி.எ.. கனவெல்லாம் என்னாகிறது.." என ஏதேதோ சொல்லிக்கொன்டுப் போனாள்.. ஆனால் வேறா ஆட்டோ கிரா·ப் என்றதும் மிதக்க ஆரம்பித்த நான் அவளிடம் கை நீட்டி அதை வாங்கக் கூட முடியலை. அவளே எனக்கு அந்த ஆட்டோகிரா·ப் புக்கைத் திறந்துப் படிக்கக் காட்டினாள்..அது முழுதும் அவள் தனக்கு என் மேல் உள்ளக் காதலை கொட்டி இருந்தாள். நான் பக்கம் பக்கமாக படித்தேன். என் தொண்டை அடைத்தது. உதட்டில் தையல் போட்டிருந்ததால் என்னால் பேசமுடியவில்லை. இடதுக் கையில் பெரியக் காயம். வலதுக் கையில் சிராய்ப்புகள். அவளிடம் ஒரு பேனா தருமாரு சைகையில் சொன்னேன். ஒரு பேப்பரில் " எனக்கு
மீண்டும் பிறவி கொடுத்தத் தாய்க்கு நன்றி ... விரைவில் எழுவேன் உன்னை என் குழந்தைப் போல கொஞ்சி சீராட்டுவேன்." என எழுதி அவளிடம் கொடுத்தேன்.


அவள் என் நெற்றியில் கைவைத்து "இன்னும் ஒரு மாசம் அப்புறம் நான் என் அப்பாவிடம் உன்னைப் பற்றி சொல்லி விடுகிறேன். நீ உன் சி.ஏ முடிந்ததும் மேரேஜ் பன்னிக்கலாம் சரிதானே.." என்றாள். நான் கண்கலங்க சரி எனத் தலையாட்டினேன்.


எங்கள் திட்டப்படி தேர்வுகள் முடிந்ததும் என்னை அவள் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அதற்கு முன்னரே தன் தந்தையிடம் சொல்லி அனுமதியும் பெற்றிருந்தாள். என்னை மரியாதையாக அழைத்துச் சென்ற அவள் அப்பா என்னை கோயம்புத்தூரிலேயே சி.ஏ. படிக்கச் சொன்னார். நான் என் தந்தை சென்னையில் ஆடிட்டர் என்பதால் அவருடைய ஆ·பீஸிலேயே பய்ற்சியில் சேர்ந்துப் படிக்கச் சொல்கிறார் என்றேன். அடுத்து வந்த வாரத்தில் சென்னைக்குச் சென்ற நான் என் தந்தையிடம் எங்கள் காதலைக் கூறினேன். நான் 4 வருடங்களாகவே ஒரு விதவையைத் தான் கல்யானம் செய்துக்கொள்வேன் என வீட்டில் சொல்லியிருந்தாலும் என்னை விட வயதில் மூத்தவளை மனக்க முடிவு செய்வேன் என நினைத்துப் பார்க்காத என் தந்தை சற்றுத் தயக்கத்திற்குப் பின் மதுமிதாவின் தந்தையை சந்திக்க ஒத்துக்கொண்டார்.


எங்கள் பெற்றோர்கள் கோவையில் சந்தித்துப் பேசியதில் திருமனத்தை கூடிய சீக்கிரத்திலேயே வைத்துக் கொள்ளலாம் என்றும் அதன் பின்னால் நான் என் சி.ஏ படிப்பைத் தொடரலாம் என்றும் முடிவு செய்தனர். அன்றே சம்பிரதாயத்திற்கு தாம்பூலம் மாத்திக் கொண்டனர். திருமனம் ஜூலை 5ம் தேதி என்று முடிவு செய்யப்பட்டது.


இது நடந்து 2 நாட்கள் கழித்து நாங்கள் வால்பாறைக்கு மதுமிதாவின் அப்பாவின் அனுமதியுடன் சென்றோம். நான் அப்போதுதான் ட்ரைவிங் பழக ஆரம்பித்திருந்தேன் எனவே காரை மதுமிதாதான் ஓட்டினாள். வால்பாறையில் மதுமிதாவிற்குச் சொந்தமான எஸ்டேட் உள்ளது. அங்கே அவர்களுக்கு சொந்தமான ஒரு கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. அங்கு சென்றதும் ஆளுக்கு ஒரு அறையில் பைகளை வைத்தோம். சற்று நேரத்தில் வந்த மதுமிதா என்னைக் குளித்து ரெடியாகச் சொன்னாள். 15 நிமிடங்களில் அவளும் குளித்து உடை மாற்றி வந்தாள். நாங்கள் இருவரும் அருகில் உள்ள பாலாஜி கோவிலுக்குச் சென்றுவந்தோம். மதுமிதா என்னைப் பார்த்து "சித்து என் முதல் கல்யானத்தைப் பற்றிய விவரங்கள் எதுவுமே நீ கேட்கலயே? என்னைப் பற்றி தெரிஞ்சுக்க ஆசையில்லையா?" என்றாள்.


நான் அதற்கு "அது உன் விருப்பம் எனக்கு எந்த அளவிற்குத் தெரியவேனும்னு நினைக்கிற்யோ அந்த அளவு சொல்லு.. எனக்கா எந்த டீடெய்லும் தெரிஞ்சுக்கனும்னு விருப்பமில்லை. இதைப் பற்றி நான் ரொம்பத் தெளிவா இருக்கேன்" என்றேன்.


என் அருகில் நெருங்கி உட்கார்ந்தாள்.. "நான் நினைச்சதைவிட நீ ரொம்ப நல்லப்பையனாத் தெரியிற.. ஐ லவ் யூ டா " என்று சொல்லி என் தோள் மீது சாய்ந்து என் கழுத்தில் முத்தமிட்டாள்.


"சித்து இப்ப வேனாம் அப்புறம் ஒருநாள் நான் சொல்றேன்.. நானுமே என் முதல் கல்யானத்திற்கு அவ்வளவு முக்கியம் தரலை. அந்த 2 மாசத்தில் 20 தடவைகளுக்கு மேல் சண்டை.. எந்த விதத்திலும் என்னுடன் ஒத்துப் போகாத மாமியார்.. கடைசியில் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அப்ப வந்ததுதான்..2 வருசமாச்சு இதுவரையில் அவர்கள் சொந்த பந்தங்கள் காண்டாக்ட் கூட பன்னலை.. எங்கே நாங்க நகையெல்லாம் திருப்பிக் கெட்டுவிடுவோமோ என்ற பயம்." என்றாள். நான் அவள் வாயை என் கையால் மூடி "வேண்டாம் மது உன் முதல் கல்யானத்தில் சோகம் அதிகம்னா எனக்கு எதுவுமே சொல்ல வேண்டாம்.. சந்தோசங்களை என்கூட பகிர்ந்துக்கிறதுன்னா ஓ.கே. இனி என் மதுக்குட்டிக்கு ஆனந்தக் கண்ணீர் கூட வரக்கூடாது ஒன்லி சிரிப்புதான் சரியா?" என்றேன்.


என் பேச்சில் கிறங்கிப்போய் என் கையை எடுத்து தன் கையோடுக் கோர்த்துக்கொண்டாள். நான் மற்றொருக் கையால் அவள் தோள்களைச் சுற்றிப் போட்டு மெதுவாக அனைத்துக் கொண்டேன். என் ஆண்மை அவளை எடுத்துக் கொள்ளத் துடித்தது.. ஆனால் எங்கே அவள் மனம் புன் பட்டுவிடுமோ அவளே க்ரீன் சிக்னல் தரும்வரை பெறுமை அவசியம் எனத் தயங்கியது. என் மன ஓட்டத்தைப் புரிந்துக் கொண்டவளாக மது என்னிடம் " சித்து உனக்கு செக்ஸ் அனுபவம் இருக்கா?" என்றாள்..


நான் " ம்ம்ம் டைரக்ட் அனுபவம் இல்லை 2 வருடம் முன்னால என் உறவுக்காரப் பெண் என்னை விரும்புவதாகச் சொன்னாள்.. நான் எனது கல்யான லட்சியத்தைச் சொல்லி மறுத்துவிட்டேன் . அப்போது வீட்டில் யாரும் இல்லாத சமயம் உடைகளைக் கழட்டிவிட்டு என் மீது தாவி முத்தமிட்டுக் கட்டிக்கொண்டாள்.. ஒரு நிமிடம் தடுமாறிய நான் சுதாரித்துக் கொண்டு விலகி விட்டேன்.. இது மட்டும்தான் என் செக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ்.. ஆனால் பல முறை மாஸ்டர்பேட் பன்னியிருக்கேன்" என்றேன். அவள் " என்னை நினைச்சு மாஸ்டர்பேட் பன்னியிருக்கியா?" என்றாள். நான் அவள் தலைமீது சத்தியம் செய்வதுப்போல கைவைத்து இல்லை என்றேன். அவள் "என் மீது உனக்கு செக்ஸ் ட்ரைவ் இல்லையா?" என்றாள்.


நான் அவளை இன்னும் நெருக்கி அனைத்தப்படி " மதுக்குட்டி நீயா எனக்கு லைசன்ஸ் தந்தாதான் உன் கிட்ட மனதாலக்கூட செக்ஸ¤வல் அப்ரோச் பன்னுவேன்.. அதுவரைக் காத்திருப்பேன்" என்றேன்.


என் உதடுகளில் முதல் முதலாக ஒரு முத்தம் கொடுத்து " லைசன்ஸ் க்ரான்ட்டட்" என்றாள். நான் ஒரு நிமிடம் என்று சொல்லி எனக்கு ஒதுக்கப் பட்டிருந்த அறைக்குள் சென்று எனது பைகளை எடுத்துக் கோண்டு வந்து அவள் அறையில் வைத்தப்படி "இனி ஒரு நிமிடம் கூட என் மதுவைப் பிரிய மாட்டேன்" என்றேன். அவள் சந்தோசமாக சிரித்தப்படி எழுந்து என் அருகில் வந்தாள். நான் அவளைப் பிடித்து கட்டிலில் தள்ளி அவள் மீது பாய்வதுப் போலத் தாவி அவள் அருகேப் படுத்துக்கொண்டு அவளைக் கட்டிப் பிடித்தேன்.


கண்களை மூடியபடி என் செய்கைகளை அனுபவித்து இருந்த மதுமிதா என்னிடம் "சித்து ஐ யாம் வெரி ஹாட் டுடே.. ஷெல் வி ஹேவ் செக்ஸ் நவ்" என்றாள். அதற்குமேல் அவளைப் பேச விடவில்லை..என் செய்கையால் வெறும் முனகல் மட்டுமே அவளிடமிருந்து வெளிவந்தது. அன்று மட்டும் 5 முறை நாங்கள் உடலுறவுக் கொண்டோம்.


இதோ இன்றோடு எங்கள் திருமன வாழ்க்கை ஆரம்பித்து 24 வருடங்கள் முடிவடைந்தன. நாளை வெள்ளி விழா ஆண்டு துவன்குகிறது. இன்று வரை நானோ மதுமிதாவோ சன்டைப் போட்டுக் கொண்டதில்லை.. அவளது முதல் திருமன வாழ்க்கைப் பற்றிப் பேசியது இல்லை.. எங்கள் செல்லப் பிள்ளை சஹானா வோடு சந்தோச வாழ்க்கை நடத்தி வருகிறோம்.



No comments:

Post a Comment

Do u wany Any Question ask to me.............